தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.8.12

அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரை இறங்கியது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி


செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்ற ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபற்றிய விவரங்களை அறிவதற்காக அமெரிக்காவில் இருந்து நாசா விண்வெளி ஆய்வு மையம் 2011-ம் வருடம் நவம்பர் மாதம் விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.  க் யூரியாசிட்டி என்ற இந்த விண்கலம் 567
மில்லியன் கிலோ  மீட்டர் தூரத்தை கடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. இன்று காலை 10.30 மணியளவில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரை இறங்கியது. 



 
நாசா விண்வெளி மையத்தில் இருந்து 300-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்த வெற்றியை ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கொண்டாடி மகிழ்ந்தனர். ரூ. 14,300 கோடி செலவில் அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதன் அமைப்பு எவ்வாறு உள்ளது? என்பதை ஆய்வு செய்யும்.

0 கருத்துகள்: