ஆந்திராவின் விஜய நகரத்தில் காயத்திரி ஜூனியர் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த சா மிலி எனும் மாணவியை அவரது ஜூனியர் மாணவி கள் ராகிங் செய்திருக்கிறார்கள்.இதனால் அந்த மா ணவி பேசும் திறனை இழந்துள்ளார் என்று மருத்துவ ர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.14 வயதான ஷாமிலி 11ம் வகுப்பு மாணவியாவார். இரவு தனியாக இருக்கு ம் நேரத்தில் அறைக்குள் வந்த சீனியர் மாணவிகள், ஷாமிலியை ராகிங்
செய்திருக்கிறார்கள். அப்போது மின்சாரம் துண்டிக்கப் பட்ட நேரத்தில் ஷாமிலியின் கழுத்தை நெரித்துள்ளனர். அவரது கூச்சல் மெல்ல மெல்ல குறைந்து இறுதியில் குரல் ஒலி காணாமல் போனது. நிலைமை விபரீதமாகிவிட்டதாக உணர்ந்து கொண்ட மாணவிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் வந்து பார்த்த போது ஷாலியினால் பேசமுடியாது போனதை உணர்ந்துள்ளனர். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஷாமிலியை பரிசோதித்த மருத்துவர்கள், ஷாலினியால் இனி பேச முடியாது என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் காவற்துறையினர் தற்போது விசாரணையை தொடக்கியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக