கடந்த இரண்டு ஆண்டுகால ஈராக் படுகொலை வர லாற்றில் இல்லாத தொடர் குண்டு வெடிப்புக்கள் நே ற்று முதல் இன்றுவரை ஈராக்கில் நடந்தேறியுள்ள ன.மொத்தம் 14 நகரங்களில் 22 தாக்குதல்கள் நடை பெற்றுள்ளன கடந்த 2010 மே மாதத்திற்கு பிறகு ந டைபெற்றுள்ள பாரிய தாக்குதல் இதுவாகும்.ஈராக் தலைநகர் பாக்தாத்தையும், அதைச் சுற்றிய வடபுல ஈராக்கையும் நோக்கி இந்தத் தாக்குதல் வியூகம் வகு க்கப்பட்டிருந்தாக ஏ.எப்.பி
செய்தித்தாபனம் தெரிவிக்கிறது.
கார்க்குண்டுகள், தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்று பலதரப்பட்ட கலவைத்தாக்குதல்களாக இவை அரங்கேறியிருக்கின்றன.
தலைநகர் பாக்தாத்தை சுற்றி ஆறு குண்டு வெடிப்புக்கள் இடம் பெற்றன ஒரு தற்கொலைத் தாக்குதல் ஒரு கார் குண்டு வெடிப்பு இதில் அடக்கம்.
வடக்கே கிருக் நகரில் நான்கு கார்க்குண்டு வெடிப்புக்கள் இடம் பெற்றன நால்வர் இறந்து 15 பேர் காயமடைந்தார்கள்.
மகுமுடியா நகரத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு 38 பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்த நகரத்தின் கார்கள் பார்க் பண்ணுமிடத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன, ஏழு ஈராக்கிய படைகள் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
தலைநகரில் மட்டும் 60 பேர் காயமடைந்தார்கள்.
ஈராக்கில் என்ன நடக்கிறது… பின்னணியில் யார்… அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் நிலமை மேலும் மோசமடைய ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குள் போனது தவறு அங்கிருந்து வெளியேறியதோ அதைவிடப் பெரிய தவறு என்பது போல அங்கு காரியங்கள் நடக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக