தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.7.12

சிரிய படைகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கின்றன


சிரியாவில் நடைபெறும் உள் நாட்டுப் போரில் இரசா யன ஆயுதங்கள் பாவிக்கப்படலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது தெரிந்ததே.இப்போது கிடைத்து ள்ள தகவல்களின்படி உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக தாம் இரசாயன ஆயுதங்களை பாவிக்கவில் லை என்றும் வெளி நாடுகளில் இருந்து சிரியாவுக்கு ள் வரும் கூலிப்படைகளுக்கு எதிராகவே பாவிப்பதா க சிரியத்தரப்பு தெரிவித்துள்ளது.மறுபுறம் அரபுலீக் சிரிய அதிபர் ஆஸாட்டை எவ்வளவு சீக்கிரம் பதவி விலகி வெளியேற முடியு
மோ அவ்வளவு விரைவாக வெளியேறும்படி அரபுலீ க் கேட்டுள்ளது.
ஏ.எப்.பி செய்தித்தாபனத்திற்கு செவ்வி வழங்கிய கட்டார் பிரதமர் கலிபா அல் ரானி இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்தார்.
மேலும் ஆஸாட்டும், அவருடைய குடும்பத்தினரும் யாதொரு பிரச்சனையும் இல்லாமல் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சிரியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உதவுவதற்கு அரபுலீக் 610 மில்லியன் குறோணரை வழங்க உடன்பட்டுள்ளது.
சிரிய எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தியிருந்த துருக்கி இப்போது அதை நகர்த்தியுள்ளது, ஐந்து கவசவாகனங்களில் அது மறுபடியும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக ராய்டர் கூறுகிறது.
ஆஸாட் துருக்கியுடன் போர் நடாத்தும் வல்லமையை இழந்துவிட்டார் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
மறுபுறம் இன்று ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது, சிரியாவிற்கு ஆயுதம் கொண்டு செல்லும் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் ஐரோப்பாவில் தடுத்து வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: