கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபரான முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பரில் நடைபெறவிருக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனநாயகத்திற்கும், பொருளாதார கட்டமைப்பிற்கு அமெரிக்காவின் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் ஒபாமா தனது செய்தியில் கூறியுள்ளார்.
எகிப்திற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஒபாமாவின் செய்தியை முர்ஸியிடம் ஒப்படைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக