தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.12

மீண்டும் துணை குடியரசு தலைவராகிறார் ஹாமித் அன்ஸாரி!


புதுடெல்லி:துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்ஸாரியை 2-வது தடவையும் அதே பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. அவரை வேட்பாளராக நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை உறுதிச்செய்ய மன்மோகன்சிங் முயற்சியை துவக்கியுள்ளார்.சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட்,
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா ஆகியோருடன் அன்ஸாரியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். மதசார்பற்ற ஜனதா தளம் அன்ஸாரியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் டானிஸ் அலி கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு இடையே வேறு எவருடைய பெயரும் துணை குடியரசு தலைவர் வேட்பாளருக்கு பரிசீலிக்க எழவில்லை என்று அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தேவகவுடாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முன்னர் குடியரசு தலைவர் பதவிக்கு அன்ஸாரியின் பெயரை காங்கிரஸ் பரிசீலித்தது. பின்னர் பிரணாபுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. துணை குடியரசு தலைவர் தேர்தலில் சொந்த வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மற்றும் பஞ்சாப் முதல்வர் அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
ஆகஸ்ட்7-ஆம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும்.
அதேவேளையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐ.மு கூட்டணி வேட்பாளர், சொந்த மாநிலமான மேற்குவங்காளத்திற்கு சென்றுள்ளார். மமதா பானர்ஜி தயாரானால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். ஜூலை 19-ஆம் தேதி குடியரசுதலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
News@thoothu

0 கருத்துகள்: