தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.12

யாசர் அராபத்தின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க அதிபர் முகமது அப்பாஸ் அனுமதி

விஷம் வைத்து கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சை யை தொடர்ந்து, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தி ன் தலைவர் யாசர் அராபத்தின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க ,அதிபர் முகமது அப்பாஸ் அனுமதி அளித்துள்ளார். பாலஸ் தீன விடுத‌லை இயக்கத்தின் ‌தலைவரான யாசர் அ ராபத், கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 11-ல் உடல்நல க்குறைவால் இறந்தார். பிரான்ஸ் சென்றிருந்த போ து உடல்நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத் துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போது அவருக்கு ‌
பொலோனியம்-210 என்ற கொடிய விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா
லே அவர் இறந்ததாக சுவிட்சர்லாந்து கதிர்வீச்சு இயற்பியல் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டது..

இது தொடர்பாக அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோ‌தனை செய்ய கோரிக்கை எழுந்தது. தற்போது பாலஸ்தீனத்தின் மேற்குகரைப்பகுதியான ரமல்லா நகரில் அராபத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸ், மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதற்காக அவரது உடலை தோண்டி எடுக்க அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக முகமது அப்பாஸின் உதவியாளர் சாயீப் இர்காத் கூறுகையில், அராபத்தின் குடும்பத்தினர் , அவரது இயக்கம் சார்ந்த அமைப்பினர் சம்மதம் தெரிவித்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுவிஸ் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு்ள்ளனர் என்றார்

0 கருத்துகள்: