தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.12

இராணுவத்துடன் நேரடியாக மோதும் புதிய ஜனாதிபதி


எகிப்தின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் கடந்தாண்டு நீக்கப்பட்ட பிறகு, இராணுவம் எகிப்து நிர்வாகத்தை கவனித்து வந்தது.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமது முர்சி வெற்றி பெற்றார். அவரிடம் கடந்த 30ஆம்  தேதி , இராணுவம் அதிகாரத்தை ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நாடாளுமன்றத்தை இராணுவம் கலைத்திருந்தது.இந்நிலையில் இராணுவத்துக்கு சவால்
விடும் விதமாக,புதிய ஜனாதிபதி முர்சி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக விவாதிக்க இராணுவ கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது. மேலும் உச்சநீதிமன்றமும் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜனாதிபதியின் இந்த உத்தரவு, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

0 கருத்துகள்: