தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.12

அமெரிக்காவுடன் சமரசம் செய்தால், முல்லா உமருக்கு அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க தயார். ஹமீது கர்சாய்


அமெரிக்க அதரவுடன் செயல்பட்டு வரும் ஆப்கான் அரசுக்கு எதிராக சண்டையிடுவதை நிறுத்திவிட்டு தலிபான் தலைவர் முல்லா உமர் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும்' என ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அப்படி உடன்பாட்டுக்கு வருவாரேயானால் போரால் சூறையாடப்பட்ட ஆப்கனில் அவர் அதிபராக

மாறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஹர்சாய் கூறினார்.
கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கனில் நடைபெற்ற தலிபான் ஆட்சிக்கு எதிராக, அமெரிக்கா நடத்திய போரில் தலிபான் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. அப்போரில் தாக்கப்பட்டு ஒரு கண்ணை இழந்த முல்லா உமர் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ஆதரவாளர்களுடன் தற்போதைய ஹமீது ஹர்சாய் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்.
முல்லா உமரின் ஆதரவாளர்கள் வன்முறையை கைவிட்டு, அமைதியான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட கர்சாய் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துகொண்டிருக்கிறார். மேலும் முல்லா உமர் துப்பாக்கி கலாச்சாரத்தை கைவிட்டால், ஆப்கானிஸ்தானில் அவர் விரும்புகிற இடத்தில், கட்சி அலுவலகம் தொடங்கலாம் என்றும், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிப் பொறுப்பேற்கலாம் என்றும் ஹமீது கர்சாய் கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த கர்சாயின் வேண்டுகோளைத் தொடர்ந்து நிராகரித்துவரும் தலிபான்கள், சமீபத்தில் அமெரிக்காவுடன் கத்தாரில் நடைபெற இருந்த தொடக்க நிலை பேச்சுவார்த்தையையும் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: