எகிப்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின்னரு ம் நாட்டில் சிக்கல் தொடர்ந்தபடியே உள்ளது.எகிப்தி ற்கு உல்லாசப் பயணம் சென்ற இரண்டு அமெரிக்கர் கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.எகிப்தின் கிழக் குப் புறத்தே சைனாய் குடா பகுதியில் இந்தக் கடத்த ல் நடந்துள்ளது, கடத்தியவர்கள் சிறையில் உள்ள சிலரை விடுவிக்கும்படி கேட்டுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் தெற்கு சைனாய் பகுதியில் இரண்டு பெண்க ள் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரிந்ததே.எகிப்தி ய படைகள் முபாரக்கின்
வீழ்ச்சிக்கு பின்னர் நாட்டின் அதிகாரத்தில் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறார்கள், இவர்களுடைய அடாவடித்தனம் எகிப்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு தீனி போட்டு வருகிறது.
கடத்தல்களும், பேரங்களும் லிபியா போல தலைவிரித்தாடுகிறது.
இஸ்லாமிய சகோதர அமைப்பில் இருந்து ஓர் அதிபர் தேர்வு செய்யப்பட்டதால் ஏறத்தாழ கருத்தியல் ரீதியாக நாடு இரண்டாக பிளவுபட்டே கிடக்கிறது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவம் கூத்தாட்டங்களை அரங்கேற்றி வருகிறது.
புதிய அதிபர் இராணுவத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையிலேயே இருக்கிறார்.
எகிப்தில் ஒரு தேர்தல் நடைபெற்று அதிபர் தேர்வு இடம் பெற்றாலும் அந்த நாடு சரியான கட்டுப்பாட்டில் வர மேலும் பத்து ஆண்டுகளாவது தேவை என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக