தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.12

மிருகக் காட்சி சாலையில் வாலிபரை உயிரோடு தின்றது புலி


டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் 150 ஆண்டுகள் பழமையான வனவிலங்குகள் காட்சி சாலை உள்ளது. அங்கே புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.கூண்டொன்றில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சியுணவு அளிக்கச் சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து  உடனடியாகஅதிகாரிகளுக்கு தகவல்

கொடுத்தார். காவலதிகாரிகள் விரைந்து வந்து வாலிபரின்  சிதைந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்து காவல் செய்தித் தொடர்பாளர் லார்ஸ் போர்க் கூறுகையில்  “புலிகள் பராமரிக்கப்படும் இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி வாலிபர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை.
வாலிபருக்கு 21 வயது இருக்கும். அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்துக் குதறியுள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அந்த வாலிபர் புலி  இருந்த கூண்டுக்குள் சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். வனவிலங்கு பூங்காவில் உள்ள எல்லா படக்கருவிகளிலும் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். பலியான வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவர். டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாலிபரை புலிகள் கொன்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இந்த மிருகக் காட்சி சாலையின் 152 ஆண்டு வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே முதல் முறை. பார்வையாளர்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையிலேயே கூண்டுகளை அமைத்துள்ளோம். என்றாலும், தானாகவே யாரும் கூண்டுக்குள் செல்ல நினைத்துச் சென்றால் ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கூறினார்.

0 கருத்துகள்: