லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.இந்நிலையில் விளையாட்டு வீரர், வீராங்கணைகள் தங்குவதற்கு அதிநவீன வசதிகளுடன் ஒலிம்பிக் நகரம் லண்டனி ல் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.200 நாடுக ளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையா ட்டு வீரர், வீராங்கணைகள் லண்டனில் நடைபெற விருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கின் றனர். இந்த விளையாட்டு வீரர், மற்றும் வீராங்க ணைகள் தங்குவதற்கு அதிநவீன வசதிகளுடன் ஒலிம்பிக்
கிராமம் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் விளையாட்டுப் பயிற்சி அரங்கம், அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் படியான சாப்பாட்டு அறை, தடகள வீரர்கள் என்ன வசதிகளை எதிர்பார்க்கிறார்களோ, அதுமாதிரியான பயிற்சி வசதிகள் என்று விளையாட்டு வீரர்களின் அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு மிக வசதியாக இந்த ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் கூட தீவிர சோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே இந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக