அல்- ஹலீல்: கடந்த புதன்கிழமை (11/07/2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் சூஸியா நகருக்குள் ஊடுரு விய தீவிரவாத யூதக் குழுவினர் அங்குள்ள பலஸ்தீ ன் வீடுகள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ள னர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அளித்த "சட்டவி ரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் அமைப்"பின் இணைப்பாளர் யத்தா ராதிப் ஜாபர், " சூஸியா பிரதேசத்தில் பலஸ்தீனர்களுக் குச் சொந்தமான நிலங்கள் பலவந்தமாய் அபகரிக்கப்பட்டு, சட்டவிரோத யூதக்
குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குடியிருக்கும் தீவிரவாதப் போக்குடைய யூதர் குழுவொன்று, பலஸ்தீனர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வீடுகளைத் தாக்கியுள்ளதோடு, அச்சுறுத்தும் வகையிலான வாசகங்களைப் பல இடங்களிலும் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வீட்டுச் சுவர்கள், கிணற்றுக்கட்டுகள் முதலானவற்றில், அப்பிரதேசத்தில் வாழும் பலஸ்தீனர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறத் தவறும் பட்சத்தில் உயிரிழப்புக்களையும் பாரிய பொருட்சேதங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அச்சுறுத்தும் வாசகங்களை மேற்படி தீவிரவாத யூதர்கள் குழு எழுதிவிட்டுச் சென்றுள்ளது.
அல் ஹலீல் பிராந்தியம் முழுவதிலும் வாழும் பலஸ்தீனர்களுக்கு ஆளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் என்பனவற்றால் மட்டுமின்றி சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக