கொழும்பு தெஹிவலை பகுதியில் அமைந்துள்ள பள் ளிவாசல் ஒன்றை அங்கிருந்து அகற்றுமாறு கோரி, பௌத்த பிக்குமார்கள் தலைமையில் ஆர்ப்பாட்ட மொன்று நடத்தப்பட்டுள்ளது.தெஹிவலை மிருககா ட்சி சாலைக்கு அருகில், கல்விஹாரை வீதியில் தா ருள் ரஹ்மான் மசூதி உள்ளது. இந்த மசூதியை அங்கி ருந்து அகற்றுமாறு கோரி25.5.12 வெள்ளிக்கிழமை ந டைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,
சிங்களவர் கள் சிலர் பள்ளிவாசல் மீது கல்வீசி தாக்குதல்
நடத்த முற்பட்டதாகவும் காவற் துறையினர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சிங்களவர் கள் சிலர் பள்ளிவாசல் மீது கல்வீசி தாக்குதல்
சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், கல்விஹாரையிலிருந்து மசூதி நோக்கி ஊர்வலமாக சென்றுள்ள ஆர்ப்பாட்டகார்கள், கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு மறியல் போராட்டமொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுமீறி செல்வதை தவிர்க்கும் நோக்கில் பொலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாரூர் ரஹ்மான் குர் ஆன் மத்ராசாவின் (மத பள்ளிகள்) செயற்பாடுகளையும் எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்துள்ளது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவாக பாவிக்கப்படுவதாகவும், உடனடியாக அதை மூடவேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பியுள்ளனர்.
எனினும் குறித்த மசூதியும், குர் ஆன் மத்ராசாவும், முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கிவருவதாக இஸ்லாமியர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குறித்த பள்ளிவாசல் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதை தொடர்ந்து, இதற்கான எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதுடன், கல்விஹாரை பிக்குகளால், தெஹிவலை - கல்கிசை மேயரிடம் முறைப்பாடு ஒன்றும் முன்னர் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று நிலைமை பதற்றமடைந்ததை அடுத்து, இவ்விடத்தை ஆராய்வதற்கு என தெஹிவலை பொலிஸாரால், இன்று மாலை தெஹிவலை கல்கிசை மாநகர சபை கட்டிடத்தில் கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அண்மையில் தம்புள்ளை நகரிலும் இதே போன்று பள்ளிவாசலை அகற்றக்கோரி, பௌத்த பிக்குகள் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக