ஐ.நா மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், வியாழக்கி ழமை முதல், இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாடு கள் குறித்த விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.இதில், இந்தியா, கடந்த நான்காண்டுகளில், அரசியல், சிவில், பொருளாதார மற்றும் பிற துறைகளில் மனித உரிமைக ளை எப்படிப் பேணியிருக்கிறது என்பதை இந்தக் கவுன்சி லின் பிற உறுப்பு நாடுகள் ஆராய்கின்றன. இந்தக் கூட்டத் தில் இந்தியாவைச் சேர்ந்த சிவில் உரிமை அமைப்புகளி ன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது
கருத்துக்க ளைச் சொல்கின்றனர்.இந்தக் கூட்டத்தில்
இந்தியா எதிர்கொள்ளும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாதப் பிரச்சினைகளை அது கையாளும்போது, மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற விமர்சனம் குறித்து விவாதிக்கப்பட்டதா, இது குறித்து இந்தியாவின் பதில் என்னவாக இருந்திருக்கிறது என்று, அந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் ஐ.நாவில் மனித உரிமைகளுக்கான செயல் குழு என்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பாக கலந்துகொண்டிருக்கும், ராஜ் குமார் அவர்கள் தமிழோசைக்குக் கருத்து தெரிவிக்கும் போது, இந்தியா, காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பிரயோகிப்பதால் எழும் மனித உரிமைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிவித்தார்.கருத்துக்க ளைச் சொல்கின்றனர்.இந்தக் கூட்டத்தில்
ஆனால் இது குறித்து ஏற்கனவே இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருப்பதை இந்திய தரப்பு இந்த அமர்வில் சுட்டிக்காட்டியிருக்கிறது என்றார் அவர்.
மேலும், இந்த அமர்வில், மனித உரிமையாளர்களை இந்திய அரசும், மாநில அரசுகளும் எப்படி நடத்துகின்றன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார் ராஜ்குமார்.
உதாரணமாக, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து பல்வேறு உறுப்பு நாடுகள் இந்த அமர்வில் இந்திய அரசிடம் கேள்விகளைத் தொடுத்தன என்றார்.
இது தவிர, இந்தியா , சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களிலும், மனித உரிமை செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எதிர்கொண்டது என்றார் அவர். தலித்துக்கள், பழங்குடியினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் போன்றவைகள் விவாதிக்கப்பட்டன.
பொருளாதாரத் தளத்தில், உணவுக்கான அடிப்படை உரிமை மசோதா இன்னும் நிறைவேறாத நிலையில் இருப்பது, பொது விநியோகத் திட்டத்தை சீர்திருத்துவது என்ற பெயரில், குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொருட்களை நியாய விலையில் வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பது போன்றவைகளும் விவாதிக்கப்பட்டன என்றார் அவர்.
இந்த கூட்ட்த்தின் முடிவுகள் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிராதவை என்று குறிப்பிட்ட ராஜ்குமார், இந்தியா இந்த கூட்ட்த்தில், தனது கருத்தாக, ஏற்கனவே அது சொல்லிவரும் கருத்துக்களையே திரும்பத்திரும்பக் கூறிவருவது ஏமாற்றத்தைத் தருவதாக இருப்பதாக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக