தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.12

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ச்சி தகவல். விமானத்தின் உரிமையாளர் கைது.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற “போஜா” என்ற தனியார் நிறுவனத்தின் பய ணிகள் விமானம் நேற்று முன்தினம் தரையில் இறங் கியபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். இந்த விபத்து பாகிஸ் தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “போ ஜா” நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தெ ன்ஆப்பிரிக்கா நிறுவனத்திடம் இருந்து பழைய விமா னங்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இவை ஏ ற்கனவே 27 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தப் பட்டவை.அவற்றை மிக குறைந்த விலை
க்கு 2-வது தடவையாக வாங்கியுள்ள னர். அதனால் தான் விபத்துக்குள்ளான விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி உள்ளது என்று உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார். எனவே இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பிரதமர் யூசுப்ரசா கிலானி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் போஜா ஏர் நிறுவனத்தின் உரிமையாளர் பரூக்போஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பலியானவர்களின் உடல்கள் மற்றும் விமானத்தின் உதிரிபாகங்கள் விபத்து நடந்த பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிதறி கிடக்கிறது. அவற்றை சேகரிக்கும் பணிகளில் ராணுவ வீரர்களும் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்: