ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த சனிக்கிழமை (21.04.2012) ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் குடியேற்றங்களை அமைத்துவரும் இஸ்ரேலின் செயல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் பெய்ட் ஹனீனா முஸ்லிம் குடியேற்றத்தில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பத்தை பலவந்தமாய் வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனத்தை மேற்படி தூது
க்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது."ஜெனீவா சாசனத்தின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பிரதேசத்தில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது" என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும், பலஸ்தீன் மக்களைத் தமது வாழிடங்களில் இருந்து வெளியேற்றுவதையும், சட்டவிரோத குடியேற்ற விஸ்தரிப்பையும், மனித உரிமை மீறல்களையும் ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முதலான அமைப்புக்கள் எத்தனையோ கண்டங்களை எழுப்பிய போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் தன்னுடைய எதேச்சதிகாரப் போக்கினை எத்தகைய மாற்றமும் இன்றித் தொடர்ந்தும் கைக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக