தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.12

நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் - எட்டு வயது சிறுவன் திருந்தினான்


இந்தோனேஷியாவில் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த எட்டு வயதேயான சிறுவன் இல்ஹாம் என்பவன் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான்இந்தோனேஷியாவில் பெற்றோருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தான். சிறு குழந்தையிலிருந்தே புகைக்கப் பழகி விட்ட சிறுவனால் அப்பழக்கத்தினை விட முடியாமல், தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது இல்ஹாமுடைய வழக்கமாக இருந்தது. சிகரெட் கொடுக்காவிட்டால் அழுது புரண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொள்வான்.

சிறுவனைப் புகைக்கப் பழக்கி பின்னர் அது சங்கிலி போன்று கடினப் பழக்கமாக ஆகிவிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இல்ஹாமுக்கு பல சிகிச்சைகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தனது 4 வருடப் புகைப் பழக்கத்தை தற்போது எட்டு வயது இல்ஹாம் முழுதுமாக விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான்

இத்தகவலை அவனது பெற்றோரே மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர்

0 கருத்துகள்: