தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.12

நேட்டோ படைகள் விலகும் திகதியில் மாற்றமில்லை பிடிவாதம்


ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் விலகுவதற் கு விதிக்கப்பட்டிருந்த 2014 டிசம்பர் 31 ம் தேதி என்ற காலக்கெடுவில் யாதொரு மாற்றமும் செய்ய முடி யாதென நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். ஆப்கான் விவகாரத்தில் எத்தகைய நிக ழ்ச்சி நிரல் பின்பற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்ட தோ அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ ன்றும் தெரிவித்தார்.நேற்று புறுக்சல்ஸ் நகரில்உள்ள நேட்டோ தலைமையகத்தில் 28 நேட்டோ அங்கத்து வ நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்த மாநாட்
டில் பேசும்போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். ஆப்கானில் நேட்டோ படைகள் நிலை கொள்ளும் காலம் தொடர்பாக 2010 ம் ஆண்டு லிஸ்பனில் போடப்பட்ட தீர்மானத்தில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
புறுக்சல்ஸ் நேட்டோ மாநாடு அமர்க்களமாக நடந்து கொண்டிருக்க, சிவ பூசையில் கரடி புகுந்தது போல லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் புகைப்படமொன்றை வெளியிட்டது. ஆப்கானில் தற்கொலைக் குண்டு வெடிப்பில் மடிந்தவரின் உடலத்திற்கு அருகில் நின்று அமெரிக்க படையினர் ஒருவர் எடுத்த புகைப்படமும், தப்பான தலைமை என்ற அவருடைய கோபமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது படைகளின் நடவடிக்கை ஒழுக்க நெறிக்கு புறம்பானது என்பதால் பராக் ஒபாமா, நேட்டோ செயலர் இருவருக்கும் பலத்த சங்கடத்தை உண்டு பண்ணியது. இது குறித்து விசாரணைகளை மேற் கொள்ளும்படி பராக் ஒபாமா தெரிவித்தார். அதேவேளை அமெரிக்கப் படைத்துறைத் தலைவர் லியோன் பனீற்றா கூறும்போது, இளம் படைவீரர்கள் பின் விளைவுகளை அறியாமல் இத்தகைய முட்டாள் தனங்களை செய்கிறார்கள் என்றும் கடிந்து கூறினார்.
இது இப்படி பரபரப்பு ஏற்படுத்த ஆப்கான் கெல்மன்ட் பகுதியில் உள்ள டென்மார்க்கின் அமடிலியோ முகாமை மூடிவிடும்படி கடந்த 2010ம் ஆண்டிலேயே பிரிட்டன் கேட்டிருந்தது. ஆபத்தான பின்னணியில் இந்த முகாமை வைத்திருப்பது பொருத்தமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இராணுவ முடிவுகளை புறந்தள்ளி முன்னாள் டேனிஸ் படைத்துறை அமைச்சர் சோன்கேத இந்த முகாமை மூடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இவர் எடுத்த முடிவு உள்ளுர் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. கடினமான பகுதியில் டேனிஸ் படைகள் மோதி வருகிறார்கள் என்ற பரபரப்பு குன்றிவிடுமென அமைச்சர் கருதியிருக்க வாய்ப்புண்டு.
எவ்வாறாயினும் படைத்துறை முடிவுகளில் அரசியல் காரணங்கள் குறுக்கிடுவது தப்பானது என்ற கோணத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இந்த முகாமில் பணியாற்றிய ஐந்து டேனிஸ் படைவீரர் இறந்து 69 பேர் படுகாயம் அடைந்தது தெரிந்ததே. நேற்று முன்தினம் டேனிஸ் படைத்துறை மூன்று பில்லியன் குறோணர்களை மீதம் பிடிக்கப் போவதாகவும், அதில் அரசியல் தலையீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. டென்மார்க் படைகள் ஈராக் போன காரணமென்ன என்பதைக் கண்டறியும் விசாரணைக் கமிசன் தனது பணிகளை தொடர இருக்கும் வேளையில் இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கான், ஈராக் போர்களின் வெளிவராத பல உண்மைகள் தொடர்ந்து கசிய ஆரம்பித்துள்ளன.
பொருளாதார நெருக்கடி, படைகள் விலகுவது தொடர்பாக நேட்டோ பேசிக்கொண்டிருக்க சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கை உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கிளப்பிவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிக்காக ஐ.எம்.எப் செலவிட்ட பணத்திற்காக அங்கத்துவ நாடுகள் 1795 பில்லியன் குறோணர்களை செலுத்த வேண்டுமென கேட்டுள்ளார். ஜப்பான் தனது பங்கிற்கு 286 பில்லியன் குறோணரை வழங்கியுள்ளது. டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகள் தமது பங்குப் பணத்தை கெடுக்க வேண்டும் என்பது இவருடைய குரலாகும்.

0 கருத்துகள்: