தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கிடையாது. வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா துலேண்ட் அறிவித்தார்.குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மூல விசையாக இருக்கும் மோடியை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்,வர்த்தக உறவுகளுக்குப் புது உத்வேகம் கிடைக்கும் எனவே அவருக்கு
"விசா' தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வால்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு 2 வாரங்களுக்கு முன்னால் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதை நிருபர்கள் சுட்டிக்காட்டி "2005-ல் அவருக்கு விசா மறுத்தீர்கள், இப்போது தருவீர்களா?' என்று கேட்டனர். "2005-ல் எடுத்த நிலையே இப்போதும் தொடருகிறது' என்று விக்டோரியா பதில் அளித்தார்.
மோடிக்கு விசா தரக்கூடாது என்று அமெரிக்காவில் வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தவர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: