தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

பின்லேடனின் 3 மனைவிகள், 11 குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நேற்று வெளியேற்றம்


அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அப்போது, அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர்.பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சட்ட
விரோதமாக பாகிஸ்தானில் தங்கி இருந்ததாக வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட பின்லேடன் மனைவிகளும், குழந்தைகளும் இஸ்லாமாபாத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அது கிளை சிறையாக மாற்றப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு 45 நாள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்கள் அனைவரையும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற அந்நாட்டு அரசு ஏற்பாடுகளை செய்தது.   அதன்படி, பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளும் இன்று சவுதி அரேபியா செல்கின்றனர்.
அவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ள வீட்டில் இருந்து மினி பஸ் மூலம் பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் விமான நிலையம் செல்கின்றனர். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பின்லேடனின் 2 மனைவிகள் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். கடைசி மனைவி அமல் அப்துல்பாத் ஏமனை சேர்ந்தவர். சவுதி அரேபியா செல்லும் இவர் அங்கிருந்து தனது 4 குழந்தைகளுடன் ஏமன் செல்ல உள்ளார்.

0 கருத்துகள்: