ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் ஆங்கில மொழியிலுள்ள தமது உத்தியோகபூர்வமானஇணைய த்தளம் முடக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த ஹாக்கிங் நடவடிக்கைக்குக் காரணம் மேற்கத்தி ய உளவு நிறுவனங்களும் நேட்டோ படையினரும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளது. இது இந்த இணையத் தளம் மீது இவ்வருடத்தில் நடத்த ப்படும் மூன்றாவது தாக்குதலாகும். தொடர்ச்சியாக நிக ழும் இத்தகைய தாக்குதல்களால் விசனத்து
க்கு உள்ளாகியுள்ள தலிபான் இய க்கம் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக தங்களாலும் சைபர் வார் எனப்படும் இணையத் தளங்கள் மீதான தாக்குதல்களைத் தாங்களும் மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.நேட்டோ அமைப்பை தலிபான்கள் நேரடியாகக் குற்றம் சாட்டிய போதும் இவ்வமைப்பு இதற்கு பதிலுரைக்கவில்லை.
தலிபான்களின் குறித்த இந்த இணையத் தளம் தமது எதிரிகளான அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு எதிரான கொள்கைகளையும் பிரச்சாரங்களையும் அடிக்கடி பிரசுரித்து வந்ததுடன் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களினூடாக ஏராளமான வாசகர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. டுவிட்டர் மற்றும் மொபைல் நெட்வேர்க்குகளினூடாக கருத்துக் கணிப்பு நடத்தி 2014 இல் அங்கு ஆதிக்கம் செலுத்தியுள்ள வெளிநாட்டுப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்பதற்கு அதிக ஆதரவைப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக