இந்தியாவில் பிரபலமான அன்னா ஹசாரே மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
இந்தியாவில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நேற்று முன்தினம்(11.12.2011) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். |
உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அன்னா ஹசாரே பேசும் போது, நாடாளுமன்றத்திற்கு தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் சுமார் 180 பேர் குண்டர்கள்(கிரிமினல் வழக்கை சந்தித்து வருபவர்கள்) என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் (12.12.2011) நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் கூறுகையில், அன்னா ஹசாரேவின் இந்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் பேச்சாகும்.
இந்த கருத்து நாட்டை கலகப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும் என்பதால் அவர் உடனடியாக தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக