வடக்கு ஐரோப்பிய வட்டகையில் புகழ் பெற்ற நோவா நோர்டிஸ்க் இன்சுலினான நோவாபென் 4 செலுத்தியை சீனா பிரதி பண்ணி விற்பனை செய்து வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் சுமார் 30 ற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் இது விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்தார். தம்மால் தயாரிக்கப்படும் இன்சுலின்களை
கண் துடைப்பிற்காக சில மில்லியன் புட்டிகளில் வாங்கும் சீனா மிகுதியை தானே போலியாக தயாரித்து விற்கிறது என்றும், சீனாவில் தயாராகும் போலி மருந்து மூலத் தயாரிப்பில் இருந்து கடுகளவும் வேறுபடாதளவு செப்பமாக பிரதி பண்ணப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தாம் சிறிய விடயமாக விட்டுவிடவில்லை பாரதூரமான விடயமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகளின் பொருட்களை விற்க தனது நாட்டை சந்தையாக வழங்குவதாகக் கூறும் சீனா அதேயளவுக்கு தனது பொருட்களை மேலை நாடுகளில் விற்க உரிமைகோரி வருகிறது. ஒரு புறம் ஐரோப்பிய சந்தையை தனது மலிவான பொருட்களால் பிடிக்க முயலும் சீனா மறுபுறம் அதே ஐரோப்பிய பொருட்களை போலியாக தயாரித்து தனது நாட்டில் சந்தைப்படுத்துகிறது. இது சீனாவின் இரட்டை வேடமாக இருக்கிறது. இன்சுலின்கள் மட்டுமல்ல விலைகூடிய வியாபார சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள்; சீன சந்தையில் போலியாக தயாரிக்கப்பட்டு பெருந்தொகையாக வெளி வருகின்றன. மேலும் சீனாவின் போலித் தயாரிப்புக்கள் அடிமாட்டு விலையில் மலிவாக இருப்பதால் அதற்கென மேலை நாடுகளிலேயே இணைய வர்த்தகம் ஒன்று வேகமாக நடைபெறுவதையும் மறுக்க முடியாது. இன்று என்ன புதிய கண்டு பிடிப்பு சீனாவுக்குள் போனாலும் நாளை அதன் போலி வடிவம் அங்கு வெளியாகிவிடுகிறது. சீனா என்ற நாடு அணு குண்டையும், வீட்டோ அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு செய்யும் வர்த்தக ஏமாற்று வேலைகள் உலகத்திற்கு பாரிய தலைவலியாக இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் கம்யூனிச சீனா பெரும் பிரச்சனை குழந்தையாகவே இருந்து வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக