தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

மலேசியா விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு


மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு க்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போ க்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளா ர். தமிழில் அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு(2012) முதல் நடை முறைக்கு வருவதாகவும் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத் தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும்

தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். சென்னையி ல் இருந்து மட்டும் இந்த ஆண்டு 4,34,050 பேர் வந்து சென்றுள்ளனர். தமிழர்கள் விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் போது மொழி தெரியாமல் தவிப்பது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பத்துமலை இல் நடைபெறும் தைபூச திருவிழாவுக்காக பல லட்சம் தமிழர்கள் ஒன்று கூடுவதுடன் மலேசியாவில் அந்நாள் விடுமுறை நாளாகவும் உள்ளது.
அத்துடன் எயர் ஆசியா எனும் மலேசியா விமான நிறுவனம் லண்டன் ஸ்டான்ச்டேத் விமான நிலையத்திலிருந்து மலேசியாக்கூடாக திருச்சிக்கு, கொழும்புக்கு குறைந்த செலவில் தமிழர்கள் போய்வர சிறந்த சேவையை வழங்குகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: