லோக்பால் மசோதாவுக்காக உணாவிரதம் இருக்க டெல்லி ராம் லீலா மைதானம் காலியாக இருந்தால் அங்கே இருக்க வேண்டியதுதானே? என்று காட்டமா க கேள்வி எழுப்பி, அன்னா ஹசாரேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.லோக் பால் மசோதா விவகாரம் தொடர்பாக மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் உண்ணாவிரதம்
இருக்க அனுமதி கோரினார்.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு அதிக அளவில் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த மைதானத்தின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநில விளையாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்கி வரும்படி காவல்துறை கூறியது.
ஆனால் விளையாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டதால்,மும்பை பாந்திரா அருகே உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் விதியை தளர்த்தி தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி ஹசாரே தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்துக் கொண்டிருக்கையில், ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் வழக்கறிஞர்,டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதனை கேட்ட உணாவிரதம் இருக்க டெல்லி ராம் லீலா மைதானம் காலியாக இருந்தால் அங்கே இருக்க வேண்டியதுதானே? என்று காட்டமாக கேள்வி எழுப்பியது.
மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு ஹசாரே குழப்பம் ஏற்படுத்தி வருவதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கு இணையானதொரு பிரசாரத்தை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது.உங்களது போராட்டம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதாகாதா? என்றும் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது.
டெல்லியில் ராம்லீலா மைதானத்தை பயன்படுத்த அனுமதி பெற்றிருந்தால் அங்கே போராட்டம் நடத்தட்டும்.அதைவிடுத்து ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என நீதிபதி மஜ்முதார், ஹசாரே வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
உங்களுக்கு சத்தியாக்கிரகமாக இருப்பது மற்றவர்களுக்கு இருக்காது. சத்தியாக்கிரகத்தை விரும்பாத மக்களும் இருக்கிறார்கள். பொதுக்கூட்டங்களால் மும்பையில் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது.இதனால் மும்பை மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்க உங்களுக்கு விதியை தளத்தி இலவசமாக மைதானத்தை அளிக்குமாறு அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.அது நீதியாகாது.அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தால், நாங்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது போன்று ஆகிவிடும்.
லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றம் விவாதித்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு இணையான எதிர் பிரச்சாரத்தை பொது இடத்தில் மேற்கொள்ள நாங்கள் அனுமதிக்க முடியாது.வேண்டுமானால் வீட்டில் உட்கார்ந்துகொண்டு எதிர்பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள்.
லோக்பால் மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளபோது,அது எந்த வடிவில் உள்ளது, அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது யாருக்குமே தெரியாது.அப்படி இருக்கையில் இந்த நேரத்தில் அந்த மசோதா குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவது தேவைதானா? என்றும் ஹசாரே தரப்பு வழக்கறிஞரை பார்த்து நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது.
பின்னர் இது விடயத்தில் மாநில அரசின் கருத்தை பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அத்ன் பிறகு இது தொடர்பாக தாம் உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக