தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

ஒரு தாய் வளத்த தப்பான வளர்ப்பால் உருவான கொடியவனின் கதை

நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 77 பேரை படுகொ லை செய்த ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் 2010 ம் ஆண்டே தனது படுகொலைத் திட்டங்களை தீட்டிவிட்டதாக அவரு டைய தாயார் நோஸ்க் உளவியலாளருக்கு வழங்கிய வா க்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த சைக்கோ கொலை யாளி குறித்த தகவல்கள் மேலை நாட்டு ஊடகங்களில் தி னசரி வெளியாகியபடி உள்ளன. பிள்ளை
வளர்ப்பில் வரக் கூடிய மோசமான தவறுகளை கண்டறிவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவதானிக்க வேண்டிய செய்தியாக இந்தக் கொடியவனின் கதை இருக்கிறது. தயாருடன் இருந்த 2010 லேயே இவனுடைய அறையில் வேட்டைத்துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. மேலும் றைபிள் ஒன்றை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறான். புத்தாண்டு தினத்தன்று மிகவும் சக்தி வாய்ந்த பிஸ்டலை விலைக்கு வாங்கியுள்ளான். இவனுடைய நிலத்தடி அறையில் பாராமான பார்சல் ஒன்று வைக்கப்பட்டிருந்ததைத் தான் அவதானித்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டு சிறுவயதிலேயே உளவில் சிகச்சை பெற்ற ஒரு சிறுவன் ஆயுதங்களுடன் இருப்பதைப் பார்த்தும் தாயார் ஏன் மௌனம் காத்தார் என்பது முக்கிய கேள்வியாகும். குடும்பத்தில் இருந்த உளவியல் நோய் பிள்ளையை வெகுவாக பாதித்துள்ளதாகவும், இவருடைய தாயாரின் தாய் ஒரு மோசமான சைக்கோ என்றும் நேற்றய செய்திகள் தெரிவித்திருந்தன. அம்மம்மா விட்ட தவறு நேற்றும், இன்று ஒரு தாய் விட்ட தவறும் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஒரு பிள்ளைவிடும் தவறில் முக்கிய பாத்திரம் வகிப்பது அவர்களுடைய பெற்றோரும், அவர்களுடைய வளர்ப்பும், குடும்ப வாழ்வியல் முறையும் முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்ற பிராய்டின் உளவியல் கருத்துக்கு ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கின் வாழ்வு அதிசிறந்த உதாரணமாகியுள்ளது. இதுபோல டென்மார்க்கில் இரண்டு பெண்களை கொலை செய்து, ஆறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அமேயர் மான் என்ற டேனிஸ்காரருக்கு நேற்று ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிறிய அறையில் இவர் அடைக்கப்படவுள்ளார். இவரும் டென்மார்க்கை கலக்கிய ஒரு பாலியல் சைக்கோ என்பது கவனிக்கத்தக்கது. இவர் குறித்த செய்திகள் இன்றைய உலக ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. டெய்லி டெலிகிராப், வோஷிங்டன் போஸ்ற், நோஸ்க், சுவீடிஸ் பத்திரிகைகள் உட்பட கூகுகிளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ், சிங்கப்பூரில் இருந்து வரும் த ஸ்டார் ரைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் இந்த கொடியவனின் செயல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்: