தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

உயிரைப் பறிக்கும் வலிநிவாரணி மருந்துகள்

மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக “பாராசிட்டமால்” எனப்படும் வலி நிவாரணி மருந்தை உட் கொள்வது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என ஆராச்சி யாளர்கள் எச்சரித்துள்ளனர்.வலிநிவாரணியாக செயல்படும் இம்மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் தேங் கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.கடந்த
சில ஆண்டுகளில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் எனப்படும் வலிநிவாரணி மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக எடின்பர்க் நகர மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.ஒரு நபர் உட்கொள்ளவேண்டிய பரிந்துரையை மீறி, பலரும் சற்றுகூடுதலான பாரசிட்டாமல் மருந்தை உட்கொள்வதை உணருவதே இல்லை என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஒரே தடவை அதிகமாக உட்கொள்ளும் மருந்தைக் கண்டுபிடிப்பதை விட அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் தேங்கும் மருந்தைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

0 கருத்துகள்: