தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.12.11

சிரியா ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை

மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம் பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்து வோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப் படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரிய உதவிவெளியுறவு அமைச்சர் பைசல் மக்கடாட் நேற்று அரபுலீக்குடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் தாம் சர்வதேச கண்காணிப்பாளரை சிரியாவிற்குள் அனுமதிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேகத்திலேயே ஆஸாட் பொது மக்களை தூக்கில் போட பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்த முயன்றுள்ளார். அதேவேளை இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகும்போது 72 அகதிகளை சிரிய இராணுவம் சுட்டுக் கொன்றது. சிரியாவில் இருந்து துருக்கி நோக்கி எல்லைகடந்து போன ஏதிலிகள் மீது சிரிய இராணுவம் கார்களில் வந்து சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலைகளைப் புரிந்துள்ளது. இதுபோல திங்களன்று 100 பொது மக்களை கொன்றுள்ளனர். இதுவரை படுகொலை எண்ணிக்கை 5000 தை தாண்டிவிட்டது. பெரும்பான்மை பாராளுமன்ற பலத்தை அடிப்படையாக வைத்து நடைபெறும் அரச பயங்கரவாதம் ஐ.நாவுக்கு பாரிய தலைவலியாக மாறியுள்ளது. 21ம் நூற்றாண்டின் மாபெரும் பிரச்சனை சிரியா போன்ற மோசமான நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது. அதுபோல பயங்கரவாதம் என்று வீண் பேச்சு பேசப்போய் பயங்கரவாத அரசுகள் அப்பாவிகளை பயங்கரவாதிகளாக்கி தூக்கில் தொங்கவிட முயன்றுள்ளன. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கானவரை சிறையில் வைத்திருக்கும் சிரிய சர்வாதிகாரி புதிய சட்டத்தை காட்டி அவர்களை தூக்கில் தொங்கவிட வழி பிறந்துள்ளது. சிரியா அவலமான வழியில் செல்ல எகிப்தில் இன்று செவ்வாய் நடைபெற்ற ஆர்பாட்டத்தை அடக்க பெருந்தொகையான இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான். நேற்று இருவர் கொல்லப்பட்டனர். எகிப்தில் மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: