தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.12.11

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய மோதல் ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயத்தைப் பாவனை யில் வைத்துள்ள நாடுகள் தமக்கு வழங்கப்பட்ட நிதி உத வி பற்றாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளன. கிடைத்து ள்ள நிதி யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் மேலதிகமாக 200 பில்லியன் யூரோக் களை கடன் கேட்டுள்ளன. இறுகிக் கிடக்கும் பனிப்பாள த்தை இளக வைக்க உப்புத்தண்ணீர்
அடிப்பது போல இந்த நிதி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 9ம் திகதி 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பொருளாதார மீட்பு குறித்த உச்சி மாநாடு தொடர்ந்தும் அதிருப்தியான நிலையிலேயே இருக்கிறது. ஐ.எம்.எப் வழங்க வேண்டிய உதவி 200 பில்லியன் யூரோவாக இருந்தாலும் பிரிட்டனும் 30.9 பில்லியன் யூரோவை வழங்கி பொருளாதாரத்தை பாதாளத்தில் இருந்து மீட்க உதவ வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. பிரிட்டனில் இன்று நிலவும் பொருளாதார நெருக்கடியில் இது தேவையற்ற சுமை என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பாரிய மோதலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது இரண்டு அணிகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே நிலவும் பிளவு வெளிப்படையான மோதலாக மாறும் என்று முன்னரே பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துவிட்டனர்.

0 கருத்துகள்: