தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.11

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை திருப்பி கொடுக்க முடியாது : ஈரான்

ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அமெரிக்காவுக்கு திருப்பி கொடுக்க முடியாது என ஈரான் புரட்சிப்படையின் மூத் த காவற்துறை அதிகாரி ஜெனரல் ஹொஸெய்ன் ஸ லாமி தெரிவித்துள்ளார்.ஆப்கான்ஸ்தான் எல்லை பகு தியிலிருந்து 250 கி.மீ தொலைவில் காஷ்மாரில் குறித் த அமெரிக்க ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. RQ-
170 எனும்குறித்த விமானம் கைப்பற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமான ஈரானிய தொலைக்காட்சிகள் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருந்தன. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஈரானால் கைப்பற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆதாரமாக இது அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த வேவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் பாரிய பதிலடி கொடுப்போம் என ஈரானிய புரட்சி இராணுவம் அறிவித்திருந்த போதும், அது என்ன பதில் நடவடிக்கை என்பதை இன்னமும் தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் தமது விமானொன்று தொலைந்துள்ளதை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக அணு ஆயுத பரிசோதனைகளில் ஈடுபடுவதாகவும், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைகளை கொண்டுவந்தன. இந்நிலையில் ஈரானுடனான தனது கொடுக்கல் வாங்கல்களை முடித்து கொள்வதாகவும், ஏற்றுமதி இறக்குமதி அனைத்திற்கும் தடைவிதிப்பதாகவும் பிரிட்டன் அறிவித்ததை தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகமும் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது.

அதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ஈரானிய தூதரக அதிகார்கள் அனைவரையும் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறும் படியாக பிரிட்டன் அறிவித்திருந்தது.

0 கருத்துகள்: