தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.11

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பாகிஸ்தான்

பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் போராளி அமைப் பொன்றின் தலைவர் மவுல்வி பகிர் முகம்மது என்ப வர் தாங்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த் தை நடத்திவருவதாக கூறிய கருத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.அரசுட ன் அமைதிப் பேச்சுவார்த் தை நடத்தி வருகிறோம்.விரைவில் இதுதொடர்பா ன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்லெண்ண அடிப் படையில் 145
திகளை அரசு போரளிகளை விடுவித்துள்ளதுடன் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள மலை மாவட்டங்களுள் ஒன்றான பஜாவூர் ஏஜென்சி பகுதியில் உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதலையும்பாக்கிஸ்தான்  நிறுத்தி உள்ளது. நாங்களும் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என்று தலிபான் அமைப்பைச் சேர்ந்த மவுல்வி பகிர் தெரிவித்துள்ளார் .

ஆனால் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக முகம்மது கூறியிருப்பதில் உண்மை இல்லை. ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைபவர்களுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பாகிஸ்தான் அரசு தரப்பு அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: