டெஹ்ரான்: மேலை நாடுகளின் கடுமையான தடைகள் அமுலில் இருக்கும் இந்த வேளையிலும் தங்கள் அணு ஆராய்ச்சித் திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று டெஹ்ரானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரான் அதிபர் அஹமதி நஜாத் தெளிவாக அறிவித்தார்.அணு ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், அணு ஆராய்ச்சி
விஷயத்தில் யாரும் ஈரானை அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் அப்பொழுது கூறினார். அணு ஆராய்ச்சி விவகாரத்தில் மேலை நாடுகளுடன் கடுத்த சண்டையில் ஈரான் இருக்கும் நிலையில் அதன் பணத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக