தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.11

"அமெரிக்க விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துவோம்"-பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், டிசம்பர் 12- பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களை நிபந்தனையின்றி சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் இராணுவம் முடிவு செய்துள் ளது.முன்னதாக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நடத்திய தாக்கு தலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்ப
வத்திற்கு எதிராக பாகிஸ்தானில் அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து ஷாம்சி விமானத்தளத்திலிருந்து அமெரிக்க விமானப்படைகள் வெளியேற பாகிஸ்தான் 15 நாள் அவகாசம் வழங்கியது. 15 நாள் அவகாசம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும், வெளியேறியது. ஷாம்சி விமானத்தளத்தில் இருந்த 5 ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த ரேடார்கள், உட்பட பல்வேறு அதிநவீன கருவிகளை அகற்றிவிட்டு, விமான தளத்தை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஷாம்சி விமானத்தளம் தற்போது முழுமையாக பாகிஸ்தான் வசம் வந்துவிட்டதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்தார்.

0 கருத்துகள்: