தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.11

முல்லை பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 15, தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடர்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி, தமிழக சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவிருக் கிற து. முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பில் தமிழக மற்றும் கேரளா ஆகி ய இரு மாநிலங்களுக்கு இடையி ல் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. சுமார் 40,000 கேரள
மக்கள் இன்று இரண் டாவதுநாளாக கேரள எல்லை பகுதியில் பேரணி நடத்தி வருகின்றன.ர்

இந்நிலையில் எதிர்வரும் 15ம் திகதி காலை 11 மணிக்கு முல்லை பெரியாறு அணை விவகாரமாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்குள்ள உரிமையை விட்டு கொடுக்க கூடாது. நமது உரிமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். முல்லை பெரியாறு பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும்.

 கேரள மக்களின் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. ஆகவே எல்லையில் போராட்டம் நடத்தும் தமிழக மக்கள் உணர்ச்சி வசப்படாமல் உடனே கலைந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

அண்மையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் கேரள சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டதுடன், புதிய அணை கட்டப்பட வேண்டும் எனவும் தற்போதுள்ள அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: