தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.11

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை


ஜெய்ப்பூர்:2008-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்டு விடுதலைச் செய்யப்பட்ட பதினொன்று முஸ்லிம்கள் தங்கள் மீது வழக்கை ஜோடித்த ராஜஸ்தான் மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடைச் செய்யப்பட்ட இயக்கமான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை(சிமி) சார்ந்தவர்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிமியுடன் இவர்களுடைய தொடர்பு குறித்து நிரூபிக்க அரசு தரப்பு தோல்வியை தழுவியதை தொடர்ந்து நீதிமன்றம் 11 பேரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது.
ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரத்தில் விடுவிக்கப்பட்ட 11 பேரும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கதாரியா, சில போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.
இதுக்குறித்து ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட ஆஸமின் தந்தை ஆதில் கூறியதாவது: நிரபராதி என்பது நிரூபணம் ஆன பிறகும் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக சமூக ரீதியிலான சிரமங்களை நாங்கள் அனுபவிக்கிறோம். ஆதலால் இதற்கு காரணமானவர்கள் மீதும், சிறைகளில் இவர்களை சித்திரவதைச் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஆஸமின் கைதிற்கு பிறகு சமூகம் எங்களை புறக்கணித்தது. மூன்று வருடங்களாக வாழ்க்கையை கழிப்பதற்கு நாங்கள் கஷ்டப்பட்டோம். என ஆதில் கூறியுள்ளார்.
நியூஸ்@தூது 

0 கருத்துகள்: