தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.11

சீனாவின் அமுக்குப்பிடியில் வடகொரியா வசமாக மாட்டிக்கொண்டது


வடகொரிய சர்வாதிகார தலைவர் கிம் யோங் இல்லின் மர ணத்தை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ அறிய முன்ன ரே சீனா அறிந்துவிட்டதென இன்றைய தென்கொரிய காலை த் தினசரிகள் எழுதியுள்ளன. அவர் மரணித்தவுடன் சீனாவுக் கு தகவல் கிடைத்துவிட்டது, அதேவேளை மற்றைய நாடு களுக்கு இந்த விடயம் தெரியாமல் போகக் காரணம் என்ன… ? பதில்.. சீனாவின் பிடியில் வடகொரியா இருக்கிறது என்ப தே..! என்று அப்பத்திரிகை
சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க சி.ஐ.ஏ மட்டுமல்ல தென்கொரிய, ஜப்பானிய உளவுப்பிரிவுகள் கூட இந்த விடயத்தில் படுதோல்வி அடைந்துள்ளன.
இதைவிட மோசமான விடயம் புதிதாக பதவிக்கு வரும் கிம் யோங் இல்லின் மகன் கிம் யோங் உங் தனது ஆட்சி அதிகாரத்தை சீனாவின் பிடிக்குள் சிக்குப்படவிட்டுவிட்டார் என்பதே. இவருடைய அதிகாரம் இப்போது இவர் மாமனிடம் பங்குபோடப்பட்டுவிட்டது. இவருடைய மாமனான 65 வயதுடைய ஜாங் சோங் தக் சீனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவருக்கு ஆட்சியின் இராணுவத்தில் முக்கிய பங்கு வழங்கி இரு பெரும் தலைவர்களாக வடகொரியாவை இரவோடு இரவாகப் பிளந்துவிட்டது சீனா. இனி இவர்கள் இருவரும் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சீனாவுக்கு விசுவாசமாக நடக்க முயல்வதே அடுத்தகட்ட வரலாறாக இருக்கப்போகிறது. இதனால் மேலை நாடுகளின் கனவில் மண் விழுந்துள்ளது. புதிய வாரீசின் மாமனான ஜாங் சோங் தக் இறந்துபோன சர்வாதிகாரி கிம் யோங் இல்லின் ஒரே தங்கையை மணம் முடித்தவர். கடந்த 2008ம் ஆண்டு கிம் யோங் இல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது தன் மகனான 27 வயதுடைய கிம் யோங் உங்கை தனது வாரீசாக பிரகடனப்படுத்தினார். உத்தமபுத்திரன் திரைப்படத்தில் ஆட்சிக்கு வந்த உலகம் தெரியாத இளைஞனான சிவாஜிக்கு மாமனாக வரும் நம்பியார்போல ஜாங் சோங் தக் தன்னை வேகமாக பிரபலப்படுத்தி இப்போது ஆட்சியில் அரைப்பங்கு அதிகாரம் பெறும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். புதிதாக வந்த உலகம் தெரியாத இளையவர் கன்னியருடன் நடனமாட மாமன் சீனா பக்கம் வடகொரியாவை இழுத்துப்போவார் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல நேபாளத்தில் மன்னர் குடும்பம் கூண்டோடு சுட்டுக் கொல்லப்பட்டதும், அங்கு ஒரு மாமன் புதிதாக மன்னரானதும் அங்கும் சீன மாவோயிஸ்டுக்கள் முக்கியமான இடத்தில் இருந்ததும் கவனிக்கத்தக்கது. 21ம் நூற்றாண்டுக்குள் உலகம் நின்றாலும் வாரீசு அரசியல் உத்தமபுத்திரன் திரைக்கதைக்கு வெளியால் போக முடியாமல் தவிப்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: