புதுடெல்லி:கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது, நாட்டின் உயர் விருதை அவமதிக்கும் செயல் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ் கவுன்சிலின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எவ்வித சமூக ஆர்வமும் இல்லாத கிரிக்கெட்வீரர்களையும், திரைப்பட
நடிகர்களையும் ஆராதிப்பவர்கள் உண்மையான கதாநாயகர்களை அவதிக்கின்றனர். தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்பவர்கள்தாம் நமக்கு தேவை. அத்தகைய நபர்களுக்குத்தான் விருது வழங்கவேண்டும்.
நடிகர்களையும் ஆராதிப்பவர்கள் உண்மையான கதாநாயகர்களை அவதிக்கின்றனர். தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்பவர்கள்தாம் நமக்கு தேவை. அத்தகைய நபர்களுக்குத்தான் விருது வழங்கவேண்டும்.
கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் விருதை வழங்கி பாரதரத்னாவின் மகத்துவத்தை கெடுத்துவிடாதீர்கள்.’ இவ்வாறு
கட்ஜு கூறியுள்ளார்.
கட்ஜு கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், ஹாக்கி வீரர் தியான் சந்திற்கும் பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை எழுந்ததையொட்டி கட்ஜு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
News@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக