தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.12.11

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி மிஸ்ட் கால் செய்து நூதன பிரசாரம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவரி ன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 92822 21212  என்ற எண்ணுக்கு ‘மிஸ்ட் கால் கொடுக்கும் நூதன பிரசார த்தை நடிகர் சத்யராஜ் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மர ண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் தாமிரா ஆகியோர் கருத்து தெரிவிக் கையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்
ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன்  இணைந்து மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் தொடர்ந்து போராடி வருகிறது. 

அடுத்த கட்ட போராட்டமாக, மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக பொதுமக்களின்  கருத்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை தொடங்கியுள்ளோம்.

தமிழகத்தில், மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், தூக்கு தண்டனையை அறவே ரத்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3  பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 92822 21212 என்ற எண்ணுக்கு ஒரு ‘மிஸ்ட் கால்‘ கொடுக்கலாம். 

உங்கள் செல்போனில் இருந்து இந்த எண்ணுக்கு பேசினால்  ஒரு முறை ரிங் டோன் வந்து தானாக இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.

இந்த எண்ணுக்கு வரும் ஒவ்வொரு மிஸ்ட் காலும் கணக்கிடப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 லட்சம் மிஸ்ட் கால் இந்த எண்ணில் பதிவாகும்போது எதிர்ப்பு குரல்களின்  வலிமையை மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் உணர்த்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். நடிகர் சத்யராஜ் மேடையில் முதல் மிஸ்ட் கால் கொடுத்து நூதன பிரசாரத்தை துவக்கி வைத்தார். இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன், சமுத்திரகனி, கவுதமன், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்: