தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.12.11

இஸ்ரத் ஜஹான்:20 போலீஸ்காரர்​கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு


புதுடெல்லி:இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் உயர் அதிகாரிகள் உள்பட 20 போலீஸார் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுச் செய்துள்ளது.சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் குஜராத் உயர்நீதிமன்றம் புதிய முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச்செய்து
வழக்கை மீண்டும் விசாரிக்கசி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
கொலை, ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் போலீஸார் மீது சுமத்தப்பட்டுள்ளன. மாணவியான இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஸீஷன் ஜோஹர் ஆகியோரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது. இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கண்டறிந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக பதவி வகித்த பி.பி.பாண்டே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி டி.ஜி.வன்சாரா, துணை கமிஷனர் ஜி.எல்.சிங்கால், என்.கே.அமீன் ஆகியோர் உள்பட 20 போலீஸ்காரர்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீ ஆகியோரை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கிலும் வன்சாரா மற்றும் அமீன் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
News@thoothu

0 கருத்துகள்: