மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு பாடம் நடத்த வேண்டாமென, சீன பிரதமர் வென் ஜியாபோ பிரித்தானியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரிட்டன் வந்துள்ள சீன பிரதமர், நேற்று திங்கட்கிழமை இக்கருத்துக்களை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனுடன் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் 'நாளைய சீனா முன்னேற்றகரமான ஜனநாயகத்தை கொண்டிருக்கும். பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகள் சீனாவுக்கு அது தொடர்பில் பாடம் கற்பிக்க தேவையில்லை' என தெரிவித்தார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரிட்டன் வந்துள்ள சீன பிரதமர், நேற்று திங்கட்கிழமை இக்கருத்துக்களை தெரிவித்தார்.
இதேவேளை இச்சந்திப்பின் போது, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பிரிட்டன் கொண்டுள்ள நெருக்கமான உறவு குறித்து கெமரூன், சீன பிரதமரிடம் விரிவாக கலந்துரையாடியதாகவும், இரு நாட்டு பன்முக விடயங்கள் குறித்தும் இருவரும் பேச்சுக்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியிலான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றும் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் லிபியா தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு, மனித உரிமை விடயங்கள் குறித்து இரு நாடுகள் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இரு தலைவர்களும் முற்றாக புறக்கணித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக