தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.6.11

திகார் சிறையில் மு.க.ஸ்டாலினைப் பார்த்து கதறி அழுத கனிமொழி

புதுடெல்லி, ஜூன். 28-  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டெல்லி திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைதான தி.மு.க.வை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட பலர் டெல்லியில் உள்ள திகார் சிறையில்
அடைக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த வாரம் டெல்லி சென்று திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை சந்தித்து பேசினார். இந்த நிலையில், நேற்று டெல்லி சென்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாலையில் திகார் சிறைக்குச் சென்று கனிமொழியை சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் எம்.பி.க்கள் ஏ.கே.எஸ்.விஜயன், ஜெயதுரை ஆகியோரும் சந்திப்பின்போது உடன் இருந்தனர். ஏறத்தாழ 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
கனிமொழியைப் பார்ப்பதற்காக சிறையின் உதவி கண்காணிப்பாளர் அறைக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு அண்ணனைப் பார்த்த கனிமொழி உடனே உடைந்து போய் அழுது விட்டார். அவரை சமாதானப்படுத்திய ஸ்டாலின் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் ஸ்டாலின் பேச அதை அமைதியாக கேட்டபடி இருந்தார் கனிமொழி. பின்னர் மனதை தேற்றிக் கொண்டு அவரும் பேசினார்.
அதே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தி.மு.க. எம்.பி. ஒருவரின் கோரிக்கையை ஏற்று இந்த சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக, திகார் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

0 கருத்துகள்: