தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.11

பிரதமருடன் ஜெ. சந்திப்பு : தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம், நிதியுதவி வழங்க கோரிக்கை!


2 நாள் விஜயமாக டெல்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்கிழமை) காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது தமிழக திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும், தமிழ் நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மத்திய தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கும் படியும்  கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி, தமிழகத்துக்கான வருடாந்திர நிதி ஒதுக்கூட்டை அதிகப்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் முதல்வர் பிரதமரிடம் கையளித்தார். 

பிரதமரும் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருடனான சந்திப்பின் பின் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் :

இலங்கை தமிழர்களின் அவல நிலை பற்றியும், தமிழக மீன்வர்களின் பிரச்சினை பற்றியும், பிரதமருடன் முக்கியமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை ஏன் நீங்கள் சந்திக்கவில்லை என கேட்கப்பட்ட போது,  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். அக்கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நான் அவரை சந்திப்பது சரியான அரசியல் நடவடிக்கையாக இருக்காது என தெரிவித்தார்.

மேலும் 2ஜி ஊழல் விவகாரத்தில் புதிதாக சிக்கியிருக்கும் தயாநிதி மாறன், தனது மத்திய அமைச்சு பதவியிலிருந்து தானாக விலகாவிடின், பிரதமர் அவரை விலக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனினும் மத்திய அமைச்சுடன், அதிமுகவுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கம், திமுகவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என கூறப்படுவதை அவர் நிராகரித்தார்.

மேலும், மாநில நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுடன் பகைத்துக்கொள்ள போவதில்லை எனவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைவது பற்றிய பேச்சு எழவேண்டிய அவசியமில்லை எனவும்

நேற்று டெல்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். அங்கு அவரை டெல்லி முதல்வர்  ஷீலாதீட்சித், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்.
நன்றி: தமிழ்மீடியா

0 கருத்துகள்: