அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருவதாக அமெரிக்க முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் உதவியை சீனா எதிர்பார்த்துள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கம் 50 ஆண்டுகளாக தான் உள்ளது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளில் 1600 ஆண்டுகள் சீனா ஆதிக்கம் தான் காணப்பட்டது. அமெரிக்கா புதிய உலகில் நுழைகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது விலகிக் கொள்ளவோ முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக