பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பின்புலத்தில் செயற்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் அவதூறு பரப்புவதாக குற்றம் சுமத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில், அவர் தெரிவித்தது :
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின்
போது பொதுமக்கள் அளித்த ஆதரவை போல வருங்காலத்தில் எனக்கு யாரும் ஆதரவளிக்க கூடாது என்பதற்காக, உங்களது கட்சியில் உள்ள பொறுப்பு மிக்க தலைவர்கள் இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின்
எனது 73 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த கட்சியிடனும், அமைப்புடனும் எதர்காகவும் கூட்டு சேர்ந்ததில்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பது உண்மையானால், நரேந்திர மோடி அரசை குறை கூறியிருக்கமாட்டேன். மதவாத அமைப்புக்கள் எதுவும் பங்கேற்காவிட்டால் தான் ராம்தேவின் போராட்டத்தில் பங்கேற்பேன் என முன்பே கூறியிருந்தேன். எனது போராட்டத்திலும் எந்தவொரு அரசியல் கட்சியும் பங்கேற்கவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.
எனது காலக்கெடு படி ஆகஸ்ட் 16ம் திகதி லோக்பா மசோதா நிரைவேறாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். இதற்காக எனது வாழ்வை தியாகம் செய்யவும் தயாராவி விட்டேன்.
சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் மீதும் வீண் குற்றச்சுமத்துக்களை சுமத்தி எங்களது குழுவினர் மீதான நம்பகத்தன்மையை கெடுக்க பார்க்கிறார்கள். ஏற்கனவே அரவிந்த் கேர்ஜிவால் மீது இப்படி ஒரு குற்றம் சுமத்தப்பட்ட போதும், அவர் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக