கருப்புப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய ஹரியானாவைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஒரு ரூபாய் கறுப்புப் பணம் கூட மீட்கப்படாமல், கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாகவும், அவரது கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாகவும் மத்திய அரசு எந்த வித உறுதிமொழிகளும் தராமல்,
பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு இருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே மாறுபட்ட விமர்சனங்களை கொண்டுள்ளது.
முன்னதாக, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த பொழுது அவரது கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதிமொழி அளித்தது. எனினும், அதனை ஏற்காத பாபா ராம்தேவ், தன்னுடைய கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதனையும் ஏற்ற மத்திய அரசு, எழுத்து மூலம் அவருக்கு உத்தரவாதம் அளித்தது. அதன் பிறகும் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் பாபா ராம்தேவ். அவரின் உள்நோக்கம் மத்திய் அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தி தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பது மட்டும் தான் என்பதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை மூலம் அவரை டெல்லியை விட்டு வெளியேற்றியது.
டெல்லியை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் ஹரித்வார் சென்ற பாபா ராம்தேவ் அங்கு உண்ணாவிரதம் இருந்தார். ஒன்பது நாட்களுக்குப் பின்னர் தன்னுடைய உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். இது பரவலாக அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கருப்புப் பணத்தை மீட்க சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறிய பாபா ராம்தேவ், தற்பொழுது உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்? கறுப்புப் பணம் முழுவதும் மீட்கப்பட்டு விட்டதா? என்று அவரது அதிருப்தி ஆதரவாளர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், மத்திய அரசு முன்னர் கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்த பொழுதே அதனை ஏற்று இருந்தால், அது உண்ணாவிரதத்துக்கு வெற்றியாக முடிந்து இருக்கும். ஆனால், அப்பொழுது வெற்று ஆரவாரத்திற்காக அதனை மறுத்து விட்டு தற்பொழுது, காரணமில்லாமல் உண்ணாவிரதத்தை கைவிடுவது, அவரை ஆதரித்தவர்களை முட்டாள்கள் ஆக்கும் செயல் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக