தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.11

அன்னா ஹசாரே குழுவினர் புறக்கணித்தாலும் ஜூன் 30 க்குள் லோக்பால் மசோதா


அன்னா ஹசாரே குழுவினர் புறக்கணித்தாலும் வரும் ஜூன் 30 க்குள் லோக்பால் வரைவு மசோதா இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. பாபா ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் மத்திய அரசால் அதிரடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அன்னா ஹசாரே, அதன் காரணமாக ஜூன் 8 ஆம் தேதி ஆஉண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், லோக்பால் வரைவு மசோதாவுக்கான கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், இது தொடர்பாக, நேற்று நடந்த ஒரு கூட்டத்தையும் அன்னா ஹசாரேவும், அவரது தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளும் புறக்கணித்து இருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, அன்னா ஹசாரே தேவையில்லாமல் பாபா ராம்தேவின் உண்ணாவிரத விவகாரத்தை லோக்பால் மசோதாவுடன் தொடர்புபடுத்துவதாகவும், லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பது தொடர்பான கூட்டங்களுக்கு வரமாட்டேன் என்று அரசுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், எனினும், அன்னா ஹசாரே குழுவினர் வந்தாலும், வராவிட்டாலும் வரும் ஜூன் மாதம் 30 க்குள் லோக்பால் மசோதா இறுதி செய்யப்படும்  என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பு குழுவில் உள்ள பிரதிநிதிகள் சிலரது கருத்துக்கள் ஏற்கப்படும் என்றும், சிலரது கருத்துக்கள் நிபந்தனையுடன் ஏற்கப்படும் என்றும், சாத்தியமில்லாத கருத்துக்கள் ஏற்கப்படாது என்றும், ஆனால் அன்னா ஹசாரே குழுவினர் தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

0 கருத்துகள்: