முதல்வர் ஜெயலலிதா இன்று13ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் சோனியாவை ஜெயலலிதா சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய திமுக
உயர் நிலைக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
உயர் நிலைக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை சந்திப்பதும், மாநில திட்டங்களுக்கு நிதி கோருவது சாதாரணமானது தான் என்பதால் மன்மாகன் சிங்குடனான அவரது சந்திப்பு அரசியல்ரீதியில் பார்க்கப்படவில்லை. அதே நேரத்தில் சோனியாவை சந்திப்பதே அரசியல்ரீதியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர் பன்னீ்ர்செல்வமும் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக