ராம்தேவ் உண்ணாவிரதம் இருப்பதை, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், ""ராம்தேவ் யோகா குரு அல்ல, யோகா குறித்த பயிற்சியை கற்றுத் தருபவர். யோகா என்ற கலையை விற்று பணமாக்கி கோடீஸ்வரர் ஆனவர்.
இவரை பார்த்து யோகா குரு
என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவது தவறு. யோகா வியாபாரி என்று சொல்லலாம். அதுபோல் இவரை போலி டாக்டர் என்றும் சொல்லலாம்.
ஏன் என்றால் இவர் முறைப்படி எந்த ஆயுர்வேத பட்டப்படிப்பும் படிக்காமல், மருந்து ஆயுர்வேத மருந்து கம்பனிகள் வைத்து முறைப்படி அரசு அனுமதி வாங்காமல் மருந்துக்களை தாயரித்து விற்பவர்.
உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவருக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதாக வெளியான தகவலால் தான், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர் அரசியலில் ஈடுபட விரும்பினால், நேரடியாக ஈடுபடலாம். ஹிந்து தீவிரவாத இயக்கங்களாகிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., ஆகியவற்றின் பின்னணியில் ஏன் செயல்பட வேண்டும்,'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக