காமெடி நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடிக்கிறது. ஏற்கனவே இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதில் சிங்கமுத்து கைதானார். சட்டமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வுக்கும் சிங்கமுத்து அ.தி.மு.க.வுக்கும் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து சிங்கமுத்து கூறியதாவது:-
தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த
ஜெயலலிதாவின் நிர்வாகக் திறனையும், கருணாநிதியின் நிர்வாகத்திறனையும் ஒப்பிட்டுப்பார்த்து ஜெயலலிதா நிர்வாகமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அ.தி.மு.க.விடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து சிங்கமுத்து கூறியதாவது:-
தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த
கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஊழல் மலிந்து கிடந்தது. சினிமாத்துறையில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யாரையும் பிழைக்க விடவில்லை. மக்கள் வெறுத்து போய் இருந்தனர். தேர்தலில் தங்கள் கோபத்தை காட்டி விட்டனர்.
ஜெயலலிதா தமிழகத்தை செழிப்பான மாநிலமாக மாற்றுவார். நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டார். தி.மு.க. கூட்டணிக்கு 200 இடம் கிடைக்கும் என்றும் ஆருடம் கணித்தார். அவரது பிரசாரம் காமெடியாக முடிந்து விட்டது.
எனக்கு எதிராகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய வைத்தார். விஜயகாந்த் அடிப்பார் என பயந்துதான் தி.மு.க. பக்கம் ஓடினார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். ரசிகன் என்று தன்னை கூறிக் கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள் என்றார். விஜயகாந்தை மட்டும் வசை பாடினார்.
இவரது பிரசாரம் சிறு பிள்ளைத்தனமானது என்று வாக்காளர்கள் ஒதுக்கி விட்டனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் தப்பு செய்து விட்டார்கள் என்று நடிகை குஷ்பு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். மக்கள் தீர்ப்பை விமர்சிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை.
மக்கள் சரியான தீர்ப்பைத் தான் வழங்கி உள்ளனர். ஜெயலலிதா சட்டம்- ஒழுங்கை சீராக்குவார். ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும். காலியான அரசு கஜானா நிரம்பும். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக